நடிகர் கார்த்தி திருமணம் கோவையில் வரும் 3ம்தேதி நடக்கிறது. கார்த்திக்கும், ஈரோட்டை சேர்ந்த சின்னச்சாமி ஜோதி - மீனாட்சி தம்பதியரின் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஈரோட்டில் உள்ள மணமகள் வீட்டில் எளிமையாக நடந்தது. தற்போது திருமண ஏற்பாடுகளில் கார்த்தி குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அழைப்பிதழ் இனிப்பு உதிர்ந்த பழ வகைகளை வைத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தமிழ் முறைப்படி மஞ்சள் பத்திரிகையில் மணமக்கள் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. விசேஷ அட்டைப் பெட்டிக்குள் இனிப்பையும் திருமண அழைப்பிதழையும் வைத்து முக்கியஸ்தர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. நகைகளை பாரம்பரிய டிசைனில் தேர்வு செய்கின்றனர். காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.
கார்த்தி - ரஞ்சனி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் 7ம்தேதி மாலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் திரளாக பங்கேற்று மணமக்களை வாழ்த்த உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக